Saturday, 14 September 2013
ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார்.
அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்துவிட்டாயே...! உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..."என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக்கொண்டேயிருந்தார். அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன்முன் தோன்றி, "நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒருவரம் மட்டும்தான் கேட்கவேண்டும்."என்றார். பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக்கொண்டு சிறிதுநேரம் யோசித்தார். பின்பு சிறிதுநேரம் யோசித்து கீழ்கண்டவரத்தைக் கேட்டார்.   

"ராஜவீதியில் தங்கத்தேர் ஓட்டிவிளையாட,அவனைப் பெற்றதாய் வெள்ளிக்கிண்ணத்தில் பால்சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவதுமாடியிலிருந்து நான்பார்த்து மகிழவேண்டும்." என்றார்.

இந்தவரத்தில் பார்வை இல்லாதவன், தனக்குப் பார்வை வேண்டும்,ராஜயோகவாழ்க்கை வாழவேண்டும், நூறாண்டு வாழவேண்டும்,ஏழுமாடிவீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரேவரத்தில் கேட்டுவிட்டான். அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப்பாராட்டிய கடவுள் அவன் கேட்டவரத்தைக் கொடுத்து மறைந்தார். புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

0 comments:

Post a Comment